இஸ்ரேல் ஈரான் மோதல் மத்திய கிழக்கு பிராந்தியங்களில் நிலவும் அசாதாரணமான சூழல் மூன்றாம் உலகப்போருக்கு தயாராகும் உலக நாடுகள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில்  கடந்த ஓராண்டாகவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் மோசமாக்கும் வகையில், இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை தாக்குதலை  (அக் 01 ) அன்று நடத்தியது.

இதற்கிடையே, இரானின் அதி உயர் தலைவர், அயதுல்லா அலி காமேனெயி  (அக்டோபர் 2) தெஹ்ரானில் இரானின் முக்கியஸ்தர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், இந்த பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் மற்றும் போருக்கு அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளை குற்றஞ்சாட்டினார். அவர்கள் இங்கு அமைதியை நிலைநாட்டுவதாக பொய்யான கருத்துக்களை கூறுகின்றனர்  எனவும் அவர் தெரிவித்தார்.

''அந்த நாடுகள் இங்கிருந்து வெளியேற வேண்டும் (Get lost) அப்போதுதான் இங்குள்ள நாடுகள் அமைதியாக இருக்கும்'' என்றும் அவர் கூறினார்.   

(அக் 01) இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவுவதற்கான உத்தரவை வழங்கிய இரானின் அதி உயர் தலைவரான காமேனெயி, ஒரு பாதுகாப்பான இடத்தில் தொடர்ந்து இருப்பதாக இரான் மூத்த அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று (அக்டோபர் 2) டெல் அவிவில் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்ட் மற்றும் பிற பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

நேற்று (அக்டோபர் 1) இரான் நடத்திய தாக்குதல் 'பெரும் தவறு' என்று குறிப்பிட்ட பிரதமர் நெதன்யாகு, இரானுக்கு தக்க பதிலடி கொடுப்பதாகக் கூறியிருந்த நிலையில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

நேற்று (அக்டோபர் 1) இரான் நடத்திய வான்வழித் தாக்குதலில் இஸ்ரேலின் விமானங்கள், டிரோன்கள் அல்லது முக்கியமான உள்கட்டமைப்புகள் என எதுவும் சேதம் அடையவில்லை என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) கூறியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலிய ஊடகங்களின்படி, இந்தத் தாக்குதலில் சிறிய அளவில் பொதுமக்கள் மட்டுமே காயமடைந்துள்ளனர், பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் கூறியுள்ளன.

நிலைமை கைமீறிச் செல்கிறது

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை குறித்து ஐ.நா., சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டம் நடந்தது.

அதில் பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், "மத்திய கிழக்கில் பற்றி எரியும் தீ கைமீறிச் செல்கிறது," என்று அப்பகுதியில் நடந்து வரும் தாக்குதல்கள் குறித்து கூறினார்.

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ‘மிகவும் கடுமையானது’ என்று விவரிக்கும் அவர், தற்காலிகப் போர்நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என்ற அவரது முன்மொழிவை இஸ்ரேல் நிராகரித்து மேலும் தாக்குதல்களை நடத்தி வருவதாகக் கூறுகிறார்.

இஸ்ரேல் மீது இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலையும் வன்மையாகக் கண்டிப்பதாக அவர் கூறுகிறார். தாக்குதல்களை அவர் இன்னும் கண்டிக்கவில்லை என்று கூறி இஸ்ரேலுக்குள் நுழைய இதற்கு முன் இஸ்ரேல் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மத்திய கிழக்கில் போர் நிறுத்தத்திற்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

லெபனான் மக்கள் கொண்டாட்டம்

இஸ்ரேல் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய செய்தி வெளியான பிறகு, லெபனானில் உள்ள ஹெஸ்பொலா உறுப்பினர்கள், பாலத்தீனிய குழுக்கள் மற்றும் இரானின் ஆதரவாளர்கள், தலைநகர் பெய்ரூட்டில் பட்டாசு வெடித்தும், துப்பாக்கியால் வானை நோக்கிச் சுட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்த மக்களுக்கு தங்குமிடமாக இருக்கும் ஒரு பள்ளியில் சில கொண்டாட்டங்களை பார்க்க முடிந்தது. இங்கு சிவில் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பிபிசி கேமரா முன்பு ‘V’ (வெற்றி) என்ற அடையாளத்தில் இரண்டு விரல்களை உயர்த்திக் காட்டி "நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்," என்று அவர்கள் கூச்சலிட்டனர்.

முன்னதாக சில ஹெஸ்பொலா ஆதரவாளர்களும், லெபனானில் உள்ள சிலரும், ‘இரானை ஹெஸ்பொலாவை விற்றுவிட்டதாக’ கூறி கடுமையாக விமர்சித்தனர். ‘ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு இரான் பழிவாங்கவில்லை, இது இஸ்ரேலுக்கு தைரியத்தை அளித்துள்ளது’ என்றும் சிலர் பிபிசியிடம் கூறினார்கள்.

ஈரானின் தாக்குதல்

ஈரான் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல் என்பது சாதாரண தாக்குதல் கிடையாது. இஸ்ரேலின் ஆணிவேரையே அசைத்து பார்த்த தாக்குதல். நாங்கள் 90% ஏவுகணைகளை மறித்துவிட்டோம்.. ஈரான் எங்களுக்கு சேதங்களை ஏற்படுத்தவில்லை என்று இஸ்ரேல் கூறலாம். ஆனால் ஈரானின் 80% ஏவுகணைகளை இஸ்ரேலில் இலக்கை தாக்கி உள்ளதாகவே உலக போர் வல்லுனர்கள் கூறுகின்றனர். இதற்கெல்லாம் கண்டிப்பாக இஸ்ரேல் பதிலடி கொடுக்கும்.. அந்த பதிலடி போரை கூட உருவாக்கும். ஏற்கனவே பல நாடுகள் போரில் ஈடுபட்டு வரும் நிலையில்.. இஸ்ரேலின் பதிலடி வெறும் போரை மட்டும் உருவாக்காது.. அது உலகப்போரையே உருவாக்கும்.

ஓராண்டாக நடைபெரும் போர்

ஒரு பக்கம் உக்ரைன் ரஷ்யா போர் உச்சத்திலேயே உள்ளது. அமெரிக்கா - ரஷ்யா இடையே 1960களில் நடைபெற்ற பனிப்போருக்கு பின்பாக மிக மிக மோசமான மோதல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு அமெரிக்கா, ரஷ்யா இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் உக்ரைன். உக்ரைன் நேட்டோ படையில் இணைய விரும்பியது. இதற்காக முயற்சிகளை செய்தது.

சோவியத் யூனியன் ஒன்றாக இருந்த போது ரஷ்யாவும் - உக்ரைனும் ஒன்றாக இருந்த நாடுகள் ஆகும். அதன்பின் 1991 டிசம்பரில் சோவியத் யூனியன் உடைந்த போது உக்ரைன் தனியாக பிரிந்தது. இப்படிப்பட்ட நிலையில் உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு ஆபத்து. ஏற்கனவே ரஷ்யாவை சுற்றி இருந்த பெரும்பாலான பழைய சோவியத் நாடுகள் அமெரிக்காவின் நேட்டோ படையில் இணைந்துவிட்டது. இதில் உக்ரைனும் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு பெரிய சிக்கலாகும். பாதுகாப்பு ரீதியாக ரஷ்யாவிற்கு நேட்டோ வைக்கும் செக்காக இது அமைந்துவிடும்.

இந்த நிலையில்தான் உக்ரைனில் தற்போது கடந்த ஒன்றரை வருடமாக ரஷ்யா போர் செய்து வருகிறது. போர் காரணமாக உக்ரைன் நேட்டோவில் இணைய முடியாது. அதே சமயம் இந்த போர் முடியாமல் அப்படியே நீடிக்கும். இதில் நேட்டோ நேரடியாக தலையிட்டால் அது உலகபோராக வெடிக்கும். உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுத உதவிகளை செய்து வருகிறது. இன்னொரு பக்கம் ரஷ்யாவிற்கு ஆதரவாக சீனா இருப்பதால் போர் சூழல் மோசமாகும் என்ற அச்சம் உள்ளது.

மொத்தமாக இரண்டு போர்களையும் கணக்கிட்டால் 10 நாடுகள் போரில் ஈடுபட்டு வருகின்றன. இதில் ரஷ்யா, சீனாவும் தலையிட்டு உள்ளது. இரண்டு நாடுகளுமே பாலஸ்தீனம் என்ற தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. இது மூன்றாம் உலகப்போராக வெடிக்கலாம் என்ற அச்சம் உள்ளது. ஏனென்றால் இரண்டு போர்கள் ஒரே நேரத்தில் நடக்கின்றன. இரண்டு போர்களிலும் அமெரிக்கா தலையிட்டு உள்ளது. ஒன்று ரஷ்ய போர், இன்னொன்று இஸ்ரேல் போர். இரண்டுமே கொள்கை, நில ரீதியாக கடுமையான போர். பல நாடுகள் இதில் தலையிட்டுள்ளன. இந்த காரணங்களுக்காக மூன்றாம் உலகப்போர் வெடிக்கலாம்,

Post a Comment

0 Comments